இது போன்ற நிரலிகள் பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில ஹாக்கர்கள் கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account notification என்னும் வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .
இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .
#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account > Account Settings குச் செல்லவும்.
- ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
#அங்கே ஏழாவதாக இருக்கும் Account settings குச் செல்லவும் .
- அதன் கீழ் Login Notifications மெனுவில் On பட்டனை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள் .
- ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
post by=tamilwares