கோசோடாட்சின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தேடல் பொறி கூகுளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கும் சீன அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வந்தது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இந்த கூகுள் சீனாவின் அதிகாரப் பூர்வ தேடல் பொறியாக இனிமேல் பங்கு வகிக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் 420 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தேடல் பொறியில் செய்திகள் வீடியோ, படங்கள் புளொக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இவற்றுடன் இணைந்த பெய்டுடாட்காம் என்ற உள்ளூர் தேடல் பொறி மூலம் கூகுளில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என தேடல் பொறி அதிகாரிகள் தெரிவித்தனர்.
post by-marikumar
No comments:
Post a Comment