Tuesday, June 19, 2012

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline



உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.
  • முதலில் இந்த  Timeline Remove லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

  • இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.
Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம்  எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம். 

இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 


                      நன்றி    =      http://www.vandhemadharam.com/2012/02/disable-timeline.html

பேஸ்புக்கின் புதிய வெளியீடு - Facebook Camera இலவச மென்பொருள்



பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் Facebook Camera என்ற ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளது. இந்த மென்பொருளை ஐபோன்களில் உபயோகிக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் மொபைழிலில் எடுக்க கூடிய போட்டோக்களை நேரடியாக பேஸ்புக் தளங்களில் பகிரலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான போட்டோக்களை உங்கள் மொபைலில் இருந்து பகிரலாம். 4.9 MB அளவுடைய இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகிறது பேஸ்புக் நிறுவனம். சாதாரண பேஸ்புக் மொபைல் அப்ளிகேசனை விட இந்த மென்பொருள் வேகமாக இயங்கும் என்று அறிவித்து உள்ளது. 









மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 
  • ஒரே நேரத்தில் பல போட்டோக்களை பகிர முடியும். 
  •  உங்களின் பேஸ்புக் நண்பர்கள் சமீபத்தில் பகிர்ந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம். 
  • போட்டோக்களை தேவைக்கு ஏற்ப வெட்டவும்(Crop), சில ஸ்பெஷல் எபெக்ட்களை சேர்த்து பேஸ்புக்கில் பகிரலாம். 
  • இந்த மென்பொருள் மூலம் Tag, Captions வசதிகளை நீங்கள் பகிரும் போட்டோக்களில் சேர்த்து கொள்ளலாம். 
  • இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.


இந்த மென்பொருள் செயல்படும் விதத்தை கீழே உள்ள சிறிய வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




மென்பொருளின் லிங்க் - Facebook Camera

நன்றி-http://www.vandhemadharam.com/2012/05/facebook-camera.html


யாஹூ ஈமெயில் கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி?



நீங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட யாகூ ஐடி வைத்துள்ளீர்களா, அதில் ஒன்றை அழிக்க வேண்டுமா? வெகுநாட்களாக உபயோகிக்காமல் வைத்துள்ள யாகூ கணக்கை நீக்க வேண்டுமா? யாகூ மெயிலில் வரும் அதிகமான ஸ்பாம் மெயில்களின் தொல்லையால் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டுமா? இது போன்ற பிரச்சினைகளில் அவதி படுபவர்களாக இருந்தால் உங்களின் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி என கீழே காணலாம்.


  • யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க முதலில் இந்த லிங்கில் சென்று உங்களின் யாஹூ ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
  • அதில் உங்கள் கணக்கை அழிப்பதற்கான பக்கம் ஓபன் ஆகும் அதில் மேலும் ஒரு முறை உங்களின் அனுமதியை கேட்கும். 
  • திரும்பவும் உங்களின் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Word Verification எழுத்துக்களை சரியாக நிரப்பவும். 
  • சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள Terminate This Account என்ற பட்டனை அழுத்தவும்.


Terminate This Account பட்டனை அழுத்தியவுடன் தற்காலிகமாக உங்களின் கணக்கு செயலிழந்து விடும். நிரந்தரமாக அழிப்பதற்கான உங்களின் கோரிக்கை யாஹூ நிறுவனத்திற்கு சென்று விடும். அவர்கள் 90 நாட்கள் வரை உங்களின் கணக்கு விவரங்களை பாதுகாத்து வைத்திருப்பார். ஒருவேளை நீங்கள் தவறுதலாக அழித்து விட்டீர்கள் திரும்பவும் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அந்த 90 நாட்களுக்குள் திரும்பவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.90 நாட்களுக்கு பிறகு உங்கள் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.

நீங்கள் யாஹூ ஈமெயில் ஐடியை அழித்தால் யாஹூவின் மற்ற சேவைகளான Answers, Address book, profiles போன்ற மற்ற சேவைகளில் இருந்தும் உங்களின் தகவல்கள் நீக்கப்படும். ஆகவே யாஹூ கணக்கை அழிப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகரிந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.



விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய



விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான வடிவில் டவுன்லோட் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து அதை bootable பைலாக கன்வர்ட் பண்ணி தான் உபயோகிக்க முடியும்.

டவுன்லோட் செய்ய:

Windows 8 Release Preview in .exe format - Download

Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 3.3 GB - Download

Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 2.5 GB - Download 

Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF 

See Also: Minimum System Requirements to Install Windows 8 Release Preview


நன்றி-http://www.vandhemadharam.com/2012/06/8.html

ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண



மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சர்வேதேச ஒலிம்பிக் அமைப்பு (IOC) இந்தியா உட்பட 64 நாடுகளுக்கு யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கிறது.

ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான், பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.

இதற்க்காக யூடியுபில் The Olympics என்ற புதிய சேனல் ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியை அளிக்க இருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த சேனலில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீடியோக்கள் நிறைந்து உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியவுடன் லைவ் லிங்க் வீடியோ தெரியும்.

லிங்க் - www.youtube.com/olympic



பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர



மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று கீழே  பார்ப்போம்.


  • முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொண்டு இந்த தளத்திற்குசெல்லுங்கள். 
  • Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.

  • போட்டோ அப்லோட் ஆகியவுடன் அதற்க்கான கோடிங் தயாராகி விடும் அதை முழுவதுமாக காப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர்  அழுத்தினால் அந்த போட்டோ உங்கள் நண்பருக்கு சென்றடையும் .



நன்றி-http://www.vandhemadharam.com/2012/06/blog-post_07.html

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?


பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில் அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது எப்படி என பார்க்கலாம்.


  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.

இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில் மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.