Tuesday, June 19, 2012

பேஸ்புக்கின் புதிய வெளியீடு - Facebook Camera இலவச மென்பொருள்



பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் Facebook Camera என்ற ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளது. இந்த மென்பொருளை ஐபோன்களில் உபயோகிக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் மொபைழிலில் எடுக்க கூடிய போட்டோக்களை நேரடியாக பேஸ்புக் தளங்களில் பகிரலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான போட்டோக்களை உங்கள் மொபைலில் இருந்து பகிரலாம். 4.9 MB அளவுடைய இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகிறது பேஸ்புக் நிறுவனம். சாதாரண பேஸ்புக் மொபைல் அப்ளிகேசனை விட இந்த மென்பொருள் வேகமாக இயங்கும் என்று அறிவித்து உள்ளது. 









மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 
  • ஒரே நேரத்தில் பல போட்டோக்களை பகிர முடியும். 
  •  உங்களின் பேஸ்புக் நண்பர்கள் சமீபத்தில் பகிர்ந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம். 
  • போட்டோக்களை தேவைக்கு ஏற்ப வெட்டவும்(Crop), சில ஸ்பெஷல் எபெக்ட்களை சேர்த்து பேஸ்புக்கில் பகிரலாம். 
  • இந்த மென்பொருள் மூலம் Tag, Captions வசதிகளை நீங்கள் பகிரும் போட்டோக்களில் சேர்த்து கொள்ளலாம். 
  • இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.


இந்த மென்பொருள் செயல்படும் விதத்தை கீழே உள்ள சிறிய வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




மென்பொருளின் லிங்க் - Facebook Camera

நன்றி-http://www.vandhemadharam.com/2012/05/facebook-camera.html


No comments:

Post a Comment