Tuesday, June 19, 2012

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர



மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று கீழே  பார்ப்போம்.


  • முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொண்டு இந்த தளத்திற்குசெல்லுங்கள். 
  • Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.

  • போட்டோ அப்லோட் ஆகியவுடன் அதற்க்கான கோடிங் தயாராகி விடும் அதை முழுவதுமாக காப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர்  அழுத்தினால் அந்த போட்டோ உங்கள் நண்பருக்கு சென்றடையும் .



நன்றி-http://www.vandhemadharam.com/2012/06/blog-post_07.html

No comments:

Post a Comment