இதில் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
இதில் 15 டூல்கள் இருக்கும். ஒவ்வொரு டூல்களுக்கும் 10 எபெக்ட் இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எபெக்ட் கிளிக் செய்து ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Open என்பதை கிளிக் செய்து கணிணியில்இருந்துஉங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நடிகை புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இவரை தேர்வு செய்ததும் வலதுபுறம் உள்ள டூல்களில் முதலில் உள்ளதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதில் உள்ள 10 டிசைன்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ - அட டிசைனை சொன்னேன்னுங்க - அதை கிளிக் செய்யுங்கள்.நான் கீழே உள்ள டிசைனை தேர்வு செய்துள்ளேன்.
அதில் வேண்டிய கலரினை தேர்ந்தெடுத்து ஒ.கே. கொடுத்து பின்னர் அப்ளை கிளிக்செய்யவும். நீங்கள் தேர்வு செய்த கலருக்கு படத்தின் டிசைன் மாறிவிடும்.
இதிலேயே Dream A என்கின்ற டூலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் புகைப்பட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதைப்போலவே இதிலேயே Weather என்கின்ற டூல் உள்ளது. மேகத்தின நடுவில் புகைப்படம் வருவது போல் .மிக அருமையாக உள்ளது.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்http://www.tamilcomputer.ch/Tools/dreamlight.exe?c=204
வேலன்.
© 2008 காப்புரிமை தமிழ்கம்பியூட்டர் இணையம்
No comments:
Post a Comment