Friday, November 12, 2010

விண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்ட் பெயரை மாற்றுவது எப்படி?

விண்டோஸ்7 னானது தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதில் இரண்டு விதமான அக்கவுண்ட்கள் இருக்கும், GUEST மற்றும் ADMINISTRATOR என்பன ஆகும். வேண்டுமென்றால் நாம் பல அக்கவுண்டுகளை உருவாக்கி கொள்ள முடியும். விண்டோசில் இருப்பியல்பாக இருக்கும் அக்கவுண்டானது GUEST அக்கவுண்ட் ஆகும். இந்த GUEST அக்கவுண்ட் பெயரை நீங்கள் விரும்பியபடி மாற்றி கொள்ள முடியும்.


இந்த அக்கவுண்ட்டின் பெயரை மாற்றம் செய்ய START பட்டனை கிளிக் செயது SEARCH பாக்சில் local security policy என டைப் செய்து local security policy யை ஒப்பன் செய்து கொள்ளவும், இல்லையெனில் Control Panel > Administrative Tools > Local Security Policy என்பதை தேர்வு செய்யவும்.


தோன்றும் Local Security Policy சாளர பெட்டியில் Local Policies > Security Options என்பதை தேர்வு செய்யவும். 



அதில் Accounts: rename guest account என்பதை Double click செய்யவும், தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான பெயரினை கொடுத்துவிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


No comments:

Post a Comment