நாம் பயன்படுத்தும் செல்போனில் நெறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி " Block list Calls " மற்றும் " Block list SMS" என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன் படுத்த முடியும் .
ஆனால் இப்போது புதிதாக " Killer Mobile சாப்ட்வேர் " மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் " Blackballer " என்பதாகும்.
இந்த அப்ளிகேசனின் சிறப்புகள் :
- நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
- அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.
- அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.
- குருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
- ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.
- பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.
- அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .( Nokia,Windows Mobile ,Android and Blackberry )
இந்த அப்ளிகேசன் " Lite version " மற்றும் " Paid version " என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த அப்ளிகேஷனை இங்கு சென்று டவுன்லோட் செய்யவும்.
Posted by ஈரோடு தங்கதுரை
ஏனுங்க, ஏதாச்சும் கண் டாக்டரோட அக்ரீமென்ட் போட்டிருக்கீங்களா? உங்க பிளாக்கைப் படிக்கறதுக்குள்ள கண்ணு ரிப்பேராகிடும் போல இருக்குங்க.
ReplyDeleteஅப்புறம் லிங்க் வேலை செய்யவில்லை.