இணைத்தளங்களில் நாம் உலாவரும் போது இணைத்தளங்களின் முகப்பு பக்கங்களுக்கு அந்த அந்த இணையத்தளங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முகப்பு பக்கங்கள் தங்கள் இணையத்தளங்களுக்கு வருபவர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறைகொண்டுன்னனர். குறிப்பாக கூகுள் இணைத்தளத்தின் முகப்பு பக்கங்கள் தினம் தினம் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது .
இப்படி எத்தனை நாளுக்கு தான் அவர்கள் போடும் படங்கள் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கிறது. வாருங்கள் நமது புகைப்படங்களையும் முகப்பு பக்கத்தில் இடம்பெற செய்து அழகு பார்க்கலாம்.
நமது புகைப்படத்தை எப்போது பிரபலமாக்குவது ? என்று ஏங்குபவர்களின் ஏக்கம் தீர்ப்பதற்கு என்றே ஒரு இணையத்தளம் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான் நீங்கள் http://www.groovle.com என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்றுBrowes என்ற பகுதியை க்ளிக் செய்து நமது போட்டோவை தேர்ந்தெடுத்து Upload க்ளிக் செய்தால் நமது போட்டோ upload -ஆகி புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் நமது போட்டோ நமது முகப்பு பக்கத்தில் எந்த அளவில் இடம்பெற வேண்டும் என்று optionகொடுத்திருப்பார்கள். Fullscreen, Tiled, Framed, என்று இருக்கும் இதில் நமக்கு எது விருப்பமோ அதை க்ளிக் செய்த பின் security code - டைகவனமாக அதற்குரிய கட்டத்தில் டைப் செய்து ஓகே கொடுத்தால் போதும் நமது முகப்பு பக்கத்தில் நமது புகைப்படம் வந்தாச்சு. நமது முகப்பு பக்கத்தின் URL வேண்டுமெனில் பக்கத்தில் கட்டத்தில் இ மெயில் முகவரி கேட்டிருப்பார்கள் அதில் நமது இ மெயில் முகவரி கொடுத்தால் நமது URL -லை நமது இ மெயில் முகவரிக்கு அனுப்பி தருவார்கள்.
Posted by விழியே பேசு.
No comments:
Post a Comment