Tuesday, November 9, 2010
மொபைலில் ஜி-டாக் வசதிக்கு அருமையான மென்பொருள்..
இப்போது பலர் ஜி-டாக் மூலம் பேசுவதும்,சாட் செய்வதும் பொழுது போக்காக கொண்டுள்ளனர்.ஆனால் கணினி முன்னால் எப்போதும் இருப்பது மிகவும் கடினமான விஷயம் தான்.மொபைலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கி இப்போது சுலபமாக கூகிள்,யாஹூ,எம் எஸ் என் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.
mig33,e-buddy போன்ற மென்பொருள்களை இப்போது பலரும் உபயோகித்து வருகிறார்கள்.இருப்பினும் இந்த மென்பொருள்களை உபயோகிக்கும் போது ஒரு பிரச்னை நம்மால் உணர முடிகிறது என்னவென்றால், மொபைல் மூலம் தான் கூகிள் கணக்கை நிறுவி இருக்கிறோம் என்பதனை எழிதாக சுட்டி காட்டுகிறது.
இந்த பிரச்சனையை சரி படுத்தும் முறையில் புதிதாக ஒரு மென்பொருளை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.நம்மில் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் தெரியாத பலரும் நிச்சயமாக இருப்பார்கள்.தெரியாதவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானதாக அமையும் என நம்புகிறேன்.
இந்த மென்பொருளின் பெயர் TALKAUNOUT.இதனை உபயோகிப்பதன் மூலம் நாம் எழிதாக google,yahoo,msn,கணக்கினை நாம் நிறுவ முடியும்,மட்டுமல்லாமல் நாம் மொபைல் மூலம் தான் இதனை பயன்படுத்துகிறோம் என்பதனை யாராலும் கண்டுபுடிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
இதனை தரவிறக்க "இங்கே சொடுக்குங்கள்"
உபயோகித்து பாருங்கள்,நிச்சயம் இதனை பயன்படுத்துவீர் என நம்புகிறேன்
Author: ஜெரின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment