Friday, November 12, 2010

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.


நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும்.

முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும்.


பிறகு Account Security  என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்தாதக் தோன்றும் திரையில்,  உங்கள்  பேஸ்புக் அக்கவுண்ட்  வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும்.





பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால்  அதுவும் Logout ஆகிவிடும்

No comments:

Post a Comment