Sunday, October 31, 2010

உங்கள் பிறந்தநாளின் சிறப்பு பற்றி அறி


இதில் உங்களுடைய பிறந்த தேதி-மாதம்-வருடம் கொடுத்து அதில் உள்ள submit கிளிக் செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்கடைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்ததளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்தநாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்-ராசி -என அனைத்தும் தெரிவிக்கும்.இன்றைய தேதிவரை உங்களுடைய வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்-மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள்என அனைத்தும் வெளியிடும். 
தவிர உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த(உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ளலாம். உங்களுடைய அடுத்த பிறந்தநாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் தேவைப்படும் என்பதையும் அது உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து கொள்ளலாம். உங்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம்.உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள் இதில் உள்ளது். இதற்கான இணைய சுட்டி தளம்சும்மா டைம் - பாஸ்க்கு கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.


post by- Aaqil Muzammil

இலவச மெயில் அலர்ட் உங்கள் மொபைலில் - இந்தியர்களுக்கு மட்டும்

இதற்கு முதலில் நீங்கள் way2sms.com ல் இலவச கணக்கு ஒன்றை வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் உடனே துவங்குங்கள்.



பின்னர் அதில் உள்ள மெயில் ஆப்ஷனில் உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் ஒன்றை துவக்குங்கள்.


பின்னர் மெயில் அலர்ட் எந்த எண்ணுக்கு வர வேண்டும் என்பதனை பதிவு செய்யுங்கள். (வாரம் ஒருமுறை இதனை re-activate செய்ய வேண்டும்).

இனி உங்கள் மின்னஞ்சலை Forward செய்ய வேண்டும்,

நீங்கள் யாஹூ உபயோகித்தால்,

உங்கள் மெயிலில் options ஐ க்ளிக் செய்யவும்,
அதில் pop&forwarding ஐ க்ளிக் செய்யவும்,

அதில் E-Mail address என்னுமிடத்தில் உங்களின் way2sms.com ன் ஐ.டி யை கொடுத்து சேவ் செய்யவும்.

நீங்கள் ஜீ-மெயில் யூசராக இருந்தால்,


உங்கள் மெயிலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று forwarding& POP IMAP டேப்-ல் forward a copy of incoming mail என்னும் இடத்தில் உங்கள் way2sms.com -ன் ஐ.டியைக் கொடுத்து சேவ் செய்யவும்.
இனி அனைத்து மின்னஞ்சல்கள் பற்றிய அலர்ட்கள் உங்கள் மொபைலுக்கு வர ஆரம்பிக்கும்.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
 


post by-Aaqil Muzammil

வைரசால் பாதிக்கப்பட்ட Task Manager ஐ சீர்திருத்துவது எவ்வாறு

 எனது கணிணியில் பலமுறை  வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.



முறை  1:


  • Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
  • Start,  Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.
  • அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்
  • அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்
  • அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.
முறை 2: 

  • Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.
  • REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f  


முறை 3:
  • Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
  • [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableTaskMgr”=dword:00000000
  • பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம் 

முறை 4:

  • Start, run ல் regedit என்று Type செய்யவும்
  • அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System    என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.

முறை 5:

  • Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்
  • அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.

post by-Aaqil Muzammil



கூகுள் குரோம் இணையஉலவி 7 ஆவது பதிப்பு வெளியீடு

கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும். 







இது தொடர்பாக அதன் வலைப்பூவில் (Blog) அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.

கூகுளின் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலிருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். 


post by-Aaqil Muzammil

Thursday, October 28, 2010

வேலன்-எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்

வித்தியாசமான டெக்ஸ்டாப் விரும்புபவர்கள் இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்தலாம். இதில் மூன்று விதமான டிசைன்கள் உள்ளது.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் மேல்புறம் இரண்டு டேப்புகள் இருக்கும். ஒன்று இணைய இணைப்பு. மற்றொன்று ஆபிஸ். இணைய இணைப்பில் நீங்கள் இணைப்பு கொடுத்துள்ள ப்ரவ்சர்களின் ஐ - கான்கள் இருக்கும். ஆபிஸில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேசன்கள் இருக்கும்.மேலும் இதில உள்ள கூட்டல் குறியை கிளிக்செய்து வேண்டிய டேபை நாமே உருவாக்கி கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

 கடிகாரம் மற்றும் கா லண்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது.

 அடுத்த டிசைன் டெக்ஸ்ட்டாப். இதில் விண்வெளி நமக்கு கிடைக்கும்.

 தீம் விஸார்டில் எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப் கிடைக்கும். நிறைய ஓயர்களுடன் வித்தியசமாக இருக்கும்.

 இதில் வரும் மெனு லிஸ்ட்டை பாருங்கள்.

 கேம்  டேபை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 ஸ்டார்ட் மெனு கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதிலுள்ள கண் நம்மை உருட்டி உருட்டி பார்பது வித்தியசமாக இருக்கும்.வேண்டிய ப்ரோகிராமை நாம் இதிலிருந்து எளிமையாக பெறலாம். 

Aston2 features:
  • Settings flexibility, science fiction themes creation capability
  • Animated skins
  • Live wallpapers
  • Skin 3D objects support
  • Widgets support (analog clock, weather forecast, power management, system resources monitor, etc.)
  • Easy wigdets personalization
  • Themes' support and their application simpleness
  • Customization simplicity and usability even for a novice user
  • Multi-language support
  • Systems with several monitors support
  • Color labels for desktop icons
  • Effects support for icons
  • Quick search on local disks and in the internet
  • Progress indicator for tasks
  • Sound effects
  • Much more...
 எளிதான புரிதலுக்காக இதன் வீடியோ தொகுப்பு கீழே-http://www.youtube.com/watch?v=NXv8jazilkU&feature=player_embeddedபயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


post by=வேலன்.

வேலன்-அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள

வெவ்வெறு இ-மெயில் முகவரிகள் - சில தளங்களின் பாஸ்வேர்ட்கள்.வங்கி கணக்கு விவரங்கள் - ஏ.டி.எம.கார்டின் பாஸ்வேர்ட்கள் என அனைத்து விவரங்களையும் தனிப்பட்ட போல்டரிலோ - பென்டிரைவிலோ - பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்.இதனை நீங்கள் பயன்படுத்தியவுடன் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்த சாப்ட்வேருக்கு நாம் தரும் மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் நாம் ஞாபகமாக நினைவில் கொண்டால் போதும்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுக்கவும. இந்த மாஸ்டர் மாஸ்வேரட் தான் அனைத்து விண்டோக்களையும் ஒப்பன் செய்யும் பாஸ்வேர்ட் உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நம்மிடம் உள்ள அனைத்து சாவி கொத்துக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அந்த சாவியை பத்திரமாக வைத்துக்கொள்ளுவோம் அல்லவா. அதுபோல்தான் இந்த மாஸ்டர் பாஸ்வேர்ட்..எனவே இதனை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.மறுமுறை அதையே மீண்டும் தரவும்.
பாஸ்வேர்ட தயாரானதும் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.
ஒ.கே. கொடுத்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் ஒப்பன் ஆகும். இதில நீ்ங்கள் முதலில் கொடுத்த மாஸ்டர் பாஸ்வேர்டினை மீண்டும் கொடுக்கவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நியு டேடா பைலை ஓப்பன் செய்யவும்.
இதில் நியு என்பதனை கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்கள தகவல்களை பதிவு செய்யவும்.நான் உதாரணத்திற்கு ஜி-மெயிலின் இ-மெயில் முகவரி -யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்துள்ளேன்.
கடைசியில் சேமிக்கவும். இதைப்போலவே உங்களிடம் உள்ள கணக்குகளை இதுபோல் ஒவ்வொன்றாக சேமிக்கவும்.
இப்போது நீங்கள் இந்த பேனலை திறந்து கொள்ளுங்கள். நீங்கள் திறக்க இருக்கும் தளமோ - இ-மெயில் விண்டோவினையோ திறந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் இந்த தளத்தில் இருந்து அந்த தளத்திற்கு கர்சரால் இழுத்து விடுங்கள். 


உங்களுக்கு அந்த தளம் ஒப்பன் ஆகிவிடும்.யூசர் நேம் தட்டச்சு செய்வதோ -பாஸ்வேரட் நினைவு கொள்ளவோ தேவையில்லை.நேரம் அதிகம் நமக்கு மிச்சமாகும். உங்கள் பர்சனல் தகவல் அடங்கிய பைலை உங்கள் பென்டிரைவில் கொண்டு செல்லாம். எந்த கணிணியிலும் பென்டிரைவை இணைத்து தகவலை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

post by= வேலன்.




கணிணியை குழந்தைகளிடமிருந்து பாதுகாக்க ஒரு இலவச software Toddler Keys


      Toddler Keys இந்த சாப்ட்வேர் குழந்தைகளிடமிருந்து கணிணியை பாதுகாக்க பயன்படுகிறது .
இதன் மூலம் CD drive ,Power off button ,keyboard ,mouse போன்றவற்றை  lock செய்யமுடியும் இதனால் குழந்தைகள் கணிணியில் உள்ள file /folder போன்றவற்றை delete செய்யமுடியாது .
ஒவ்வொருமுறை கணிணியில் உள்ள keyboard ,mouse பயன்படுத்தும்போது ஒலி எழுப்பும் வகையில் நிறுவலாம் .குறிப்பாக alt+ctrl+del keys பயன்பாடு தவிர்க்கப்படும் .
          
  CD drive குழந்தைகள் அதிகமாக அழுத்தி இதனை திறந்து மூடி விளையாடுவார்கள் இதனையும் இந்த சாப்ட்வேர் மூலம் lock செய்யலாம் .குழந்தைகள் கேம்,movies பார்க்கும்போது  அவர்கள் மற்ற file/folder பயன்படுத்த முடியாது .


       கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்துகொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் .
இதனை நிறுவியதும் படத்தில் உள்ளதுபோல் ஒரு icon TK  எனத்தோன்றும் icon தேர்வுசெய்தால் மேற்கண்டவாறு options காட்டும் நமக்கு  வேண்டியவசதியை அமைத்துக்கொள்ளலாம் .Quit என type செய்து பழைய நிலைக்கு கணிணியை கொண்டுவரலாம் . 
  • Mouse Lock options:
    • Left mouse button
    • Middle mouse button
    • Right mouse button
    • Double click
    • Mouse wheel
  • Keyboard lock options:
    • Standard character keys (letters, numbers, signs, etc)
    • Additional keys (Navigation keys, function keys, ins/del, home/end, etc)
    • Windows system shortcuts(e.g. alt-tab, win-key, etc)
Size: 450 KB
System: Windows XP, Vista and 7