உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஷங்கரின் “எந்திரன்”.
எந்திரன் திரைப்படத்தின் வசூல் எப்படியிருக்கும் என்பது பற்றி சிறு அலசல். அதிகமாக இல்லீங்க… முதல் மூன்று நாட்களின் வசூல் தோராயமாக எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
உலக அளவுல எந்திரன் படம் மொத்தம் 2500 பிரதிகள் திரையிடப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு தியேட்டர்லயும் குறைந்தபட்சம் 5 ஷோ போடப்போறாங்க (6, 7 ஷோ கூட உண்டு… மாயாஜாலில் 50-60 ஷோவாம் ). தோராயமா ஒரு டிக்கெட்டின் விலை Rs.150 என வைத்துக் கொள்வோம் ( கவுன்டர்லயே ரூ.300-க்குதாங்க டிக்கெட்டே கொடுத்தாங்க…). ஒரு தியேட்டருக்கு தோராயமா 500 சீட்ஸ் இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.
2500 பிரிண்ட் x 500 சீட் x Rs. 150 x 5 ஷோ= 93,75,00,000 = Rs. 93.75 Crores / Day.
Rs. 93.75 Crores x 3 Days = Rs.281.25 Crores.
முதல் 3 நாள் வசூல் மட்டுமே ரூ.280 கோடியைத் தாண்டுகிறது . அதுவும் ஒரு டிக்கெட்டோட விலை Rs. 150 என்ற கணக்குப்படியே. ( யம்மாடியோ…)
No comments:
Post a Comment