Friday, October 1, 2010

அசிஸ்டென்ட்(Typing Assistant)

கிராமங்களில் வேடிக்கையாக சொல்லுவார்கள் - அவனைப்பார் எள் என்று சொல்வதற்குள் எண்ணையாக வந்து நின்று இருக்கின்றான் என்று. அதைப்போல் இந்த டைப்பிங் அசிஸ்டன்ட்டில் நாம் வார்த்தையின் ஒரு எழுத்தை தட்டச்சு செய்வதற்குள் அதற்குண்டான வார்த்தை ரெடியாக வந்து நிற்கும். 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை க்ம்யுட்டரில் இன்ஸ்டால் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள Custom Settings கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான கீ களை செட்செய்து கொள்ளவும்.
நமக்கு தேவையான பாண்ட் சைஸ்களையும் வகைகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
Auto Launch-ல் தேவையான அப்ளிகேஷன்களையும் நாம் இதில் சேர்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினி்ல் பாருங்கள்.

Auto Complete என்கின்ற டைட்டிலில் ஒரு எழுத்து நாம் தட்டச்சு செய்கையில் அதற்கு தொடர்பான அனைத்து வார்த்தைகளும் நமக்கு டிஸ்பிளே ஆகும். தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதைப்போலவே Auto Expand -ல் கடிதத்தில் அடிக்கடி எழுதப்படும் முகவரிகள்,வார்த்தைகள். நீண்ட வாக்கியங்களை இதில எளிதில் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சொற் தொடருக்கு ஒரே ஒரு எழுத்தை நாம் ஷார்ட்கட்டாக அமைப்பது மூலம் முழு சொற்தொடரும் நமக்கு கிடைக்கும்.இதன் மூலம் கணிசமான நேரத்தை நாம் குறைத்து்க்கொள்ளலாம்.
பதிவின் நீளம் கருதி நான் குறைந்த அளவே இங்கு இதன் பயன்களை பதிவிட்டுள்ளேன். நீங்கள் உபயோகித்து பார்க்கும் சமயம் இதன் பயன் களை பார்த்து வியந்து போவீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

No comments:

Post a Comment