Monday, October 4, 2010

குட்டீஸ் திறனை வளர்க்க உதவும் இணைய தளங்கள்-ஓர் பார்வை



      இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .     
   கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .
                      பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
                 எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .....
           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு 
 


 
 

 

 
 
http://www.funbrain.com/brain/MathBrain/MathBrain.html

 
 
http://www.amathsdictionaryforkids.com/
   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள்

No comments:

Post a Comment