ஒரு முன் எச்சரிக்கையாக விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டாலேஷன் சிடியை அருகில் வைத்துக் கொள்ளவும்.
தேவையான USB டிரைவ் குறைந்தபட்சம் 512 எம்பி கொண்டதாக இருக்கவேண்டும்.
"USB Disk Storage Format Tool" என்ற பயன்பாட்டு நிரலை கீழ்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
http://www.pctipp.ch/downloads/dl/32594.asp
http://snipurl.com/tacdec
இதில் டிவைஸில் உங்கள் USB டிரைவை தேர்ந்தெடுத்து, ஃபைல் சிஸ்டத்தில் 'FAT' தேர்ந்தெடுத்து வால்யூம் லேபிள் (11 உருக்கள்) ஏதாவது கொடுத்து ஸ்டார்ட் கொடுக்கவும். (கவனம்: - 'USB' டிரைவில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும்)
மை கம்ப்யூட்டரை திறந்து, Tools -> Folder Options -> View -> Show hidden Files and Folders -> Hide protected operating system files என்பதை டிஆக்டிவேட் செய்யவும்.
உங்கள் கணினியின் சிஸ்டம் டிரைவிற்கு சென்று (எந்த டிரைவில் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கிறதோ அந்த டிரைவ்,உதாரணத்திற்கு ' C:' என வைத்துக் கொள்வோம்) ரூட் டைரக்டரியில் உள்ள 'boot.ini, ntldr, NTDETECT.COM ' ஆகிய ஃபைல்களை 'USB' டிரைவிற்கு காப்பி செய்து கொள்ளவும்.
'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.INI' என்ற ஃபைலை 'BOOT.BAK ' என 'RENAME' செய்துகொள்ளுங்கள். இனி உங்கள் கணினி ஹார்ட் டிரைவிலிருந்து பூட் ஆகாது. அதே சமயம் உங்கள் 'USB' டிரைவ் உங்கள் கணினியின் இயங்குதளத்தை திறக்கும் சாவியாக மாற்றப்பட்டுள்ளது.
இனி சோதித்து பார்க்கலாம்..,
உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து 'BIOS' இற்குள் சென்று 'USB' டிரைவை 'FIRST BOOT DEVICE' ஆக மாற்றிக்கொள்ளவும், 'QUICK BOOT' ஐயும் 'SHOW FULL SCREEN LOGO' ஐயும் முடக்கி (DISABLE), 'USB LEGACY SUPPORT' மற்றும் 'USB 2.0 CONTROLLER' ஆகியவைகள் இருந்தால் அவைகளை ஆக்டிவேட் செய்து சேமித்து 'BIOS' லிருந்து வெளிவரவும்.
இப்பொழுது உங்கள் கணினி 'USB' டிரைவில் பூட் ஆகும்.
ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் 'USB' ட்ரைவின் ரெஸ்பான்ஸ் டைமை 'BIOS' ல் அதிகரிக்கும் வழி உள்ளதா என பார்க்கவும், உதாரணமாக, 'USB MASS STORAGE RESET DELAY' அதில் உள்ள அதிகபட்ச மதிப்பை தேர்ந்தெடுக்கவும்.
என்ன 'USB' டிரைவில் பூட் ஆகிவிட்டதா?
ஏதாவது சிரமம் ஏற்பட்டால் பின்னூட்டம் இடவும்.
மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற...,
'USB' ல் பூட் ஆகி விண்டோஸ் வேலை செய்தால், 'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.BAK' என்ற ஃபைலை 'BOOT.INI' என 'RENAME' செய்து கொள்ளுங்கள்.
'USB' ல் பூட் ஆகவில்லையெனில், 'BIOS' ல் 'FIRST BOOT DEVICE' டிவைஸை உங்கள் சிடி ட்ரைவாக தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் சிடியை உபயோகித்து பூட் செய்து இன்ஸ்டாலேஷன் விஸார்டில் ரிப்பேர் என கொடுத்து, அதில் வரும் டாஸ் பிராம்ப்டில் 'REN C:\BOOT.BAK C:\BOOT.INI' என கொடுத்து ரீ-ஸ்டார்ட் செய்யவும்.
Posted by சூர்யா ௧ண்ணன்