Saturday, September 4, 2010

Gmail இல் ஈமெயில்களை தரப்படுத்தும் வசதி!!!

      இந்த blog இல் ஈமெயில்களை பற்றி நான் எழுதும் பதிவுகள் அனைத்துமே gmail சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் gmail பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாதென்பதால், அவை அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். புது புது வசதிகளை தருவதில் googleக்கு இணை யாரும் இல்லை என்று குறிப்பிடுவதும் வாடிக்கையான ஒன்று ஆகிவிட்டது. ஆனாலும் அப்படி குறிக்கப்படுவதற்கான தகுதிகளை தக்கவைத்து கொண்டுதான் இருக்கிறது. gmail தற்போது புதிதாக அறிமுகபடுத்தி இருக்கும் வசதி priority inbox.
        சிலர் inboxகளில் நூற்றுக்கணக்கான ஈமெயில் குவிந்திருக்கும். மேலும் தினமும் பல ஈமெயில்கள் வரும் அவற்றில் பெரும்பாலும் நண்பர்கள் forward செய்யும் முக்கியத்துவம் இல்லாத மெயில்கள் ஆகத்தான் இருக்கும் இருக்கும். இவற்றையும் நமக்கு வேண்டிய முக்கியமான அலுவலகம் சார்ந்த மெயில்களையும் பிரித்து தகவல்களை அறிந்து கொள்வது சிரமமாக பலரும் உணர்ந்திருப்பார்கள். இவர்களின் உணர்வுகள் gmail இன் காதுகளுக்கு எட்டியதால் தற்போது priority inbox ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். spamகளை filter செய்வது போல inbox இல் இருக்கும் மெயில்களையும் பிரித்து important மெயில்கள் என்று தனியாக காட்டும். மற்றவை everything else என்று கீழாக காட்டும். இந்த வசதியை activate செய்த உடனேயே  உங்களுடைய பயன்பாடுகளை வைத்து தானாகவே important மெயில்களை தரம் பிரித்து காட்டுகிறது. இவற்றில் மாறுதல்கள் உங்கள் விருப்பம் போல் செய்யலாம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் "+" மற்றும் " - " குறிகளை அழுத்தி உங்களுக்கு முக்கியமானவை எது என்று நீங்கள் குறிப்பிடலாம். இவ்வசதியை நீங்கள் பயன்படுத்தும் அளவிற்கு உங்களுக்கு முக்கியமானது எது என்பதை விரைவில் புரிந்து கொள்கிறது. சிலருக்கு உங்கள் boss இடமிருந்து வரும் மெயில்களும், சிலருக்கு காதலியிடம் இருந்து வரும் புகைப்படமும் முக்கியமாக இருக்கலாம். அவர்களின் விருப்பங்களை அறிந்து சரியான தேர்வுகளை தரும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே blog, reader,orkut தளங்கள் மற்றும் buzz மூலமும் google இல் search செய்யும் விஷயங்களையும் track செய்வதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட்ட விருப்பங்களை அறிந்து வருகிறது தற்போது ஈமெயில் பயன்பாட்டையும் கண்காணித்து அறிந்து கொள்கிறது. ஆனாலும் google தான் சேவைகளை மேம்படுத்த மட்டுமே இவற்றை பயன்படுத்தும் என்று நம்பலாம். இவையெல்லாம் google இன் plus பக்கங்கள் என்றால் googleக்கும் அடி சறுக்கும் என்பது போல் சமீபத்திய minus gmail இல் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக 4.25 மில்லியன் பயனர்களின் ஈமெயில்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முறை ஒரே மெயில்கள் deliver செய்யப்பட்டது. மேலும் சில deliver செய்ய முடியாமலும் போனது.
http://www.youtube.com/watch?v=5nt3gE9dGHQ

வாசு

No comments:

Post a Comment