Friday, September 24, 2010

படங்களினால் உங்கள் பிளாக் திறக்க தாமதமாகிறதா-Lazy Load Plugin

பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் போது அதற்கு சம்பந்தமான படங்களை சேர்ப்போம் எதையும் எளிதில் புரிய வைக்கவே நாம் படத்தை உபயோகிக்கிறோம்.ஒரு படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அது மட்டுமில்லாமல் போட்டோ பதிவுகளும் போடுவோம்.
ஆகையால் படங்கள் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் பிளாக் திறக்கும் போது படங்கள் தான் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. சாதாரண படங்களை விட gif வகை படங்கள் இன்னும் அதிக நேரம் எடுத்து கொள்ளும். நம்முடைய தளமும் திறக்க நேரம் எடுக்கும். இதை தவிர்க்கவே இந்த Lazy load Plugin
JQUERY lAZY LOAD PLUGIN:

  • நம் தளத்தில் இந்த குறையை போக்க நம்மக்கு உதவுவதே இந்த Lazy Load Plugin.   
  • இந்த வசதி Jquery தளத்தினால் அளிக்க பட்டுள்ளது. 
  • இதை நம் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • DESIGN- EDIT HTML - பகுதிக்கு செல்லுங்கள்.
  • </head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். 
  • கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே முன்னே பேஸ்ட் செய்யவும். 
<script charset='utf-8' src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>
<script src='http://pwam.googlecode.com/files/jquery.lazyload.js' type='text/javascript'/>
<script charset='utf-8' type='text/javascript'>
$(function() {
$(&quot;img&quot;).lazyload({placeholder : &quot;http://pwam.googlecode.com/files/grey.gif&quot;,threshold : 200});
});
</script>
அவ்வளவு தான் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி SAVE செய்து விடவும். அவ்வளவு உங்கள் பிளாக்கில் படங்கள் விரைவில் லோட் ஆகி விடும்.
Posted by சசிகுமார்

No comments:

Post a Comment