ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும், இது கூகுள் நிறுவத்தின் ஈ-மெயில் சேவையாகும், ஈ-மெயில் என்றால் முன்னொரு காலத்தில் ஈ-மெயில் என்றாலே யாகூ மெயில் என்ற ஒரு நிலை இருத்து வந்தது. ஆனால் இப்போதோ பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சிறப்பான ஈ-மெயில் சேவையினை வழங்கி வருகிறன. உதாரணமாக Gmail, Hotmail, Myway, Inbox.com, Rediff போன்ற நிறுவனங்கள் ஆகும். அதில் முதலிடத்தில் இருப்பது GMAIL ஆகும், இந்த ஈ-மெயில் சேவையின் மூலமாகவே பல்வேறு விதமான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
தினமும் பல ஈ-மெயில்கள் வரும், அதில் சில ஈ-மெயில்கள் மிகவும் முக்கியமானது ஆகும். அப்போது நமக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நமது இன்பாக்சில் இருக்கும் ஈ-மெயிலை நீக்கி விடலாம். அப்போது நாம், பல தகவல்களை இழக்க நேரிடும். இது போனற சூழ்நிலையை தவிர்க்க நமது இன்பாக்சில் உள்ள ஈ-மெயில்களை பேக்அப் எடுத்து வைத்திருந்தால் சமாளிக்க முடியும். இதற்கு Gmail-Backup என்னும் மெபொருள் உதவுகிறது.
மென்பொருளை பதிவிறக்க:Download
இந்த Gmail-Backup னை பதிவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு, ஒப்பன் செய்யவும் அதில் உங்களின் ஈ-மெயில் முகவரி, கடவுச்சொல் எந்த இடத்தில் Backup னை பதிய வேண்டிய இடத்தினை தேர்வு செய்து விட்டு பின் எந்த தேதியிலிருந்து எந்த தேதிவரை பேக்அப் எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளிட வேண்டும், பிறகு Backup பொத்தானை அழுத்த வேண்டும். இனி உங்களின் மெயில்கள் பேக்அப் ஆக தொடங்க்கும், Restore செய்ய இதே வழிமுறையினை கையாண்டு எந்த இடத்தில் Backup தகவல் உள்ளதோ அதனை தேர்வு செய்து Restore பொத்தானை அழுத்த வேண்டும்.
No comments:
Post a Comment