நாம் டவுன்லோட் செய்த சில Subtitles நம்மிடம் உள்ள திரைப்படத்தோடு பொருந்தாது போலாம் அல்லது 1 விநாடியோ , இரு விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ ஓடலாம். இவற்றை சரி செய்து சரியான முறையில் திரைப்படத்தை ரசிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இதன் பெயர் SubMagic .இது ஒரு இலவச மென்பொருள். இதை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை பற்றி காண்போம் .
இந்த மென்பொருளில் வசதி என்ன என்றால் நம் திரைப்படத்தை இதில் Open செய்து மற்றும் Subtitle File ஐஉம் உடன் Open செய்து இரண்டையும் காணலாம். தவறாக உள்ள வார்த்தைகளை நாம் Edit செய்யலாம். கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வார்த்தைகளை Edit செய்யலாம் . மேலும் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வரிகளை சேர்க்கலாம் ,வெட்டலாம் ,பிரிக்கலாம் மற்றும் இடமற்றலாம் .
மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File 1 விநாடியோ , இரு விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இருந்தால் அவற்றை கீழ்க்கண்ட முறையில் சரிசெய்யலாம். கீழே உள்ள புகைப்படத்தை பார்க்க .அதில் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியில் இரு Options இருக்கும் .
ஒன்று All Subtitles மற்றொன்று Selection
All Subtitles Option ஐ பயன்படுத்தி அனைத்து வரிகளையும் எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம்.
Selection Option ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வரிகளை மட்டும் எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம்.
இதில் Sooner மற்றும் Later என உள்ள இரு Options முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்ய உதவுகிறது .
மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File சில பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் உதவுகிறது . கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் பிழைகளை சரி படுத்தலாம் .
Fix Now என்ற Option ஐ கிளிக் செய்தால் பிழைகளை சரிசெய்து தந்து விடும் . மேலும் விபரங்களுக்கு மற்றும் டவுன்லோட் செய்யஇங்கே கிளிக் செய்க .
அன்புடன் ,
லக்கி லிமட்
No comments:
Post a Comment