அண்மைய நெருப்புநரி பதிப்பை இந்த www.mozilla.com/firefox சுட்டிக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
நெருப்பு நரி நீட்சிளை இந்த சுட்டியில்(https://addons.mozilla.org/en-US/firefox/ )டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இந்த தளத்தில் அனைத்து நீட்சிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
முதலில் உங்களுக்கு தேவையான நீட்சியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக ReminderFox என்னும் நீட்சியை எப்படி நிறுவது என பார்ப்போம்.தேவையான நீட்சியை தேர்வு செய்த பின் Add To Firefox என்பதை கிளிக் செய்க.
கிளிக் செய்தவுடன் கீழே உள்ள செய்தி நெருப்புநரியின் மேற்புறத்தில் தோன்றும்.அதில் Allow என்பதை கிளிக் செய்க.(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
கிளிக் செய்த பின் தோன்றும் கீழ்கண்ட திரையில் Install Now என்பதை தேர்வு செய்க.
இப்பொழுது நீட்சி Install ஆவதை காணலாம்.
நீட்சி நிறுவிய பின் கீழே உள்ள திரை தோன்றும்.அதில் Restart என்பதை கிளிக் செய்தால் நெருப்புநரி மூடி மீண்டும் திறக்கும்.
இப்போது Tools சென்று Addons என்பதை தேர்வு செய்து அதில் Extension என்பதை கிளிக் செய்து பார்த்தால் நீட்சி நிறுவ பட்டிருக்கும்.
No comments:
Post a Comment