இது போன்ற கோப்புகளை DVD ப்ளேயரில் இயங்கும் படியாக மாற்றுவதற்கு ஒரு சுதந்திர இலவச மென்பொருள் DVD Flick (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை கணினியில் பதிந்து கொள்வது எளிதானது. இதில் டைட்டில் கொடுப்பது மற்றும் வீடியோ கிளிப்புகளை இணைப்பது எளிதானதுதான்.
AVI, WMV, FLV போன்ற வீடியோ கோப்புகளை நீங்கள் Explorer இல் Browse செய்தோ அல்லது ப்ராஜக்ட் விண்டோவில் ட்ராக் அன்ட் ட்ராப் மூலமாகவோ இணைக்க முடியும்.
இதன் ப்ராஜக்ட் திரை பகுதியில் நீங்கள் இணைத்த வீடியோ கோப்புகளை வரிசை மாற்றுவது, டைட்டில் மாற்றுவது போன்றவற்றோடு, விருப்பத்திற்கேற்ப மெனு வடிவை அமைக்கலாம்.
இதனுடைய Burning பகுதி மற்ற DVD Burning மென் பொருட்களில் தரப்பட்டுள்ள வசதிகளை உள்ளடக்கியுள்ளது. Burn பட்டனை க்ளிக் செய்தவுடன் வீடியோ கோப்புகள் என்கோடிங் ஆக துவங்கிவிடும். இதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு போரடிக்காமல் இருக்க இந்த திரையில் உள்ள Entertain me பொத்தானை க்ளிக் செய்து Tetris விளையாட்டை விளையாடலாம்.
அவ்வளவுதான். இனி இந்த DVD ஐ உங்கள் வீட்டு DVD player இல் பயன் படுத்தலாம். இதற்காக பணம் கொடுத்து மென்பொருட்களை வாங்குவதை விட இந்த சுதந்திர இலவச மென் பொருளை பயன் படுத்தி பயன் பெறுங்கள்.
சூர்யா ௧ண்ணன்
No comments:
Post a Comment