Friday, September 24, 2010

எந்திரன் டிக்கெட்களுக்கு 'ஓவர் ரேட்'-ரஜினி எச்சரிக்கை





'ஒருவரைக் கவிழ்க்க விரோதிகள் கூட தேவையில்லை... உடனிருப்பவர்களே போதும்' என்று தனது படங்களில் வசனம் வைத்தவர் ரஜினி.

அதனால்தானோ என்னமோ, சில விஷயங்களில் தனக்கு எதிராக விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் கூட, மனதில் பட்டதை பளிச்சென்று வெளிக்காட்டும் விதமாய் முடிவெடுப்பார்.

குசேலன் படத்தை குறைந்த விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதை சாய்மிராவும் பாலச்சந்தரும் புறக்கணித்ததால் எத்தனை மோசமான பின் விளைவுகளை ரஜினி சந்திக்க வேண்டி வந்தது!

எந்திரன் வெளியாகும் இந்தத் தருணத்தில், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்... "அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை மட்டுமே வசூலிக்க வேண்டும், கூடுதல் விலை வைத்து விற்க வேண்டாம்...," என்பதுதான்.

இதனை வாய் மொழி வேண்டுகோளாகவே ரஜினி முன்வைத்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை, இதுவரை டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள திரையரங்குகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ 100 மற்றும் 120 -ஐ மட்டுமே பெற்றுக் கொண்டு முன்பதிவு கூப்பனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான பிறகும் இந்த நிலை தொடர்ந்தால், அநாவசிய விமர்சனங்களைத் தவிர்க்கலாம். மற்ற தியேட்டர்காரர்கள் ரஜினியின் அட்வைஸைக் கேட்பார்களா... அல்லது கூடும் கூட்டத்தைப் பார்த்து மனசு மாறி இஷ்டத்துக்கும் ஏற்றி விடுவார்களா... பார்க்கலாம்!

No comments:

Post a Comment