Saturday, September 18, 2010

எந்திரன் ரீலிஸ்-உறுதி செய்தது சன் பிக்சர்ஸ் !



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் “எந்திரன்”. எந்திரன் படம் உருவாவதற்கு பல வருடங்கள் கடந்தன. இருப்பினும் ரீலிஸ் ஆவதற்கு தேதி தள்ளி தள்ளி போனது. தற்போது ரீலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பில் ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கலாநிதி மாறன் மிகபிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட அனைத்து திரையரங்குகளிலும் அக்டோபர் 1 ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “எந்திரன்” படத்திற்கு 2,000 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.
எந்திரன் கெளன்டவுன் ஸ்டார்ட்…

No comments:

Post a Comment