அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் “எந்திரன்” படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
பொதுவாக அமெரிக்காவில் ஒரு வாரம் முன்புதான் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் எதிர் பார்ப்பையும் அடுத்து 2 வாரம் முன்பே “எந்திரன்” முன்பதிவு தொடங்கிவிட்டது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் டிக் கெட்கள் அனை த்தும் விற்று தீர்ந்த முதல் இந்திய படம் என்ற சாதனை யையும் படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் “எந்திரன்”. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் மிகப் பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் எந்திரன் திரைப்படம் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், ஒரே நேரத்தில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் “எந்திரன்”. இந்தியா மற்றும் இத்தனை நாடுகளில் மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையையும் எந்திரன் பெறுகிறது.
அமெரிக்காவில் “எந்திரன்” படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர். இந்திய மதிப்பு படி 1150 ரூபாய். இந்த மதிப்புக்கு, ஹாலிவுட் படத்தின் டிக்கெட் கூட விற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment