Friday, September 24, 2010

நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:

  • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.


  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
  •  உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும். 
  • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். 
FRIENDS:



  • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.


  • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது. 


இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை
Posted by சசிகுமார் 



No comments:

Post a Comment