குறும்பதிவு சேவையான டிவிட்டர் எத்தனையோ விதங்களில் உதவலாம். அதே போல பயணங்களின் போது வழித்துணையாகவும் விளங்கலாம்.
புதிய ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பயண விவரத்தை டிவிட்டரில் தெரிவித்து, அந்த ஊரில் எங்கு தங்கலாம். எந்தெந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் போன்ற கேள்விகளை கேட்பீர்கள் என்றால், உங்கள் பின் தொடர்பாளர்களில் யாராவது அதற்கான சிறந்த பதிலை அளிக்க கூடும்.
ஆனால் இதற்கு உங்கள் டிவிட்டர் வலைப்பின்னல் பறந்து விரிந்ததாகவும், சுறுசுறுப்பானதாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் கேள்வி கேட்டு விட்டு தகுந்த பதில் கிடைக்கும் வரை பயணத்தை தள்ளிப்போடவோ, காத்திருக்கவோ முடியாது.
இது போன்ற சூழ்நிலையில் உங்களுக்கு உதவக் கூடிய அருமையான சேவை தான் டிவாலர். பயணங்களின் போது கை கொடுக்கும் டிவிட்டர் வழி காட்டி தான் இந்த டிவாலர்.
டிவிட்டரில் வெளியாகும் பயண விவரங்களை எல்லாம் அழகாக ஒரே இடத்தில் தொகுத்து தருகிறது இந்த தளம்.

பயண விவரங்கள் என்றால், பருவ நிலையில் துவங்கி, பார்க்க வேண்டிய இடங்கள், வரை, வெளியூர் பயணத்தின் போது ஒருவருக்கு பயனளிக்க கூடிய எல்லா தகவல்களும் தான்.
ஐந்து வகை நிலங்களைப் போல, பருவநிலை, சுற்றுலா மையங்கள், சாப்பிட ஏற்ற ஓட்டல்கள், பொழுது போக்கு மற்றும் ஷாப்பிங் என ஐந்து வகையான தலைப்புகளில் இந்த விவரங்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஐந்து வகை நிலங்களைப் போல, பருவநிலை, சுற்றுலா மையங்கள், சாப்பிட ஏற்ற ஓட்டல்கள், பொழுது போக்கு மற்றும் ஷாப்பிங் என ஐந்து வகையான தலைப்புகளில் இந்த விவரங்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
எல்லா விவரங்களுமே டிவிட்டர் வெளியில் இருந்து எடுக்கப்பட்டவை தான். டிவிட்டர் ஒரு எல்லையில்லா தகவல் நதி. ஒவ்வொரு நொடியும் டிவிட்டர் பயனாளிகள் விதவிதமான தகவல்களை டிவிட்டர் பதிவுகளாக பகிர்ந்து கொள்கின்றனர்.
பார்த்த திரைப்படம், படித்த புத்தகம், சாப்பிட்ட உணவு, மனதில் தோன்றும் சிந்தனை, காதில் கேட்ட உரையாடல் என எண்ணற்ற தகவல்கள் டிவிட்டர் நதியில் கரை புரண்டு ஓடுகின்றன.
பார்த்த திரைப்படம், படித்த புத்தகம், சாப்பிட்ட உணவு, மனதில் தோன்றும் சிந்தனை, காதில் கேட்ட உரையாடல் என எண்ணற்ற தகவல்கள் டிவிட்டர் நதியில் கரை புரண்டு ஓடுகின்றன.
இவற்றில் இருந்து பயணிகள் எதிர்பார்க்க கூடிய தகவல்களை மட்டும் தேர்வு செய்து, தொகுத்து தருவது தான் டிவாலர் சேவையின் தனிச் சிறப்பு. ஏற்கனவே சொன்னது போல 5 வகையில் இந்த தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பருவ நிலையை கிளிக் செய்தீர்கள் என்றால் குறிப்பிட்ட நகரில் மழை பெய்கிறதா? பனி பொழிவு உள்ளதா, வெய்யில் அடிக்கிறதா? என்ற விவரங்கள் டிவிட்டர் பதிவுகளாக இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, சென்னையில் இன்று மாலை எதிர்பாராத விதமாக செம மழை என்று சென்னைவாசிகள் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்கள் என்னும் பட்சத்தில், டிவாலர் அதை தேடி கண்டு பிடித்து சென்னை பருவநிலை பகுதியில் சேர்த்து விட்டிருக்கும். ஆக சென்னைக்கு வர உள்ள டெல்லிவாசி, பயணத்திற்கு முன் டிவாலரின் ஆய்வு செய்திருந்தால், சென்னையில் மழை பெய்த விவரத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தயாராகலாம்.

இதே போல ஒரு நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி பலதரப்பட்ட டிவிட்டர் செய்திகளை படித்து சுற்றுலா மையங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். சாப்பிட தகுந்த ஓட்டல்கள், வாங்க வேண்டிய பொருட்கள், சினிமா (அ) இலவச அரங்குகள் போன்ற விவரங்களை டிவிட்டர் பதிவுகள் மூலமே அறிய முடியும்.
ஒருவர் எந்த நகருக்கு செல்கிறாரோ அந்த நகரை குறிப்பிட்டால் போதும். அந்நகரம் தொடர்பான டிவிட்டர் தகவல்களை பெற முடியும்.
இந்த விவரங்களை தரக்கூடிய பயண தளங்களுக்கும், வழிகாட்டி புத்தகங்களுக்கும் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை எல்லாம் விட டிவாலர் மிகவும் விசேஷமானது. காரணம், பயண புத்தகங்கள் மற்றும் பயண தளங்களில் இடம் பெற்றிருக்கும் விவரங்கள் பழசாக இருக்கலாம். ஆனால், டிவாலரோ இப்போது இந்த நொடியில் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை திரட்டித் தருகிறது.
எந்த நகரம் பற்றி ஒருவருக்கு தகவல் தேவையோ அந்த நகரம் பற்றிய விவரங்களை டிவாலர் ஒரே இடத்தில் தருகிறது. பயணத்திற்கு முன் டிவாலரில் கொஞ்ச நேரம் செலவிட்டால், பயண திட்டத்தை மேலும் சிறப்பாக திட்டமிடலாம்.
டிவிட்டர் பிரியர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக தங்கள் நகரம் பற்றி தகவல்களையும் அந்த அந்த தலைப்பில் பதிவிடலம்.http://www.twaller.com/
No comments:
Post a Comment