மென்பொருளின் பயன்கள்:
- இந்த மென்பொருள் நம் கணினி திருடப்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
- இந்த மென்பொருள் மிகச்சிறிய அளவே உடையது (968kb).
- இதில் Theft alarm மட்டுமின்றி Battery Alarm உள்ளது. இது நம் லேப்டாப்பின் பேட்டரி குறைந்தால் நமக்கு தெரிய படுத்துகிறது.
- இதில் உள்ள மற்றொரு சேவையானது health Alarm. இந்த வசதி நாம் கொடுக்கப்படும் நேர இடைவெளிக்கு ஏற்ப நமக்கு உடலிற்கு ஒய்வு தேவை போன்ற செய்திகளை தரும்.
- Disk Alarm, Permitter Alarm, Intention Alarm, Panic alarm போன்றவை இதர பிற வசதிகளாகும்.
- இவைகள் தேவைபட்டாலும் நீங்கள் Activate செய்து கொள்ளுங்கள்.
http://www.lalarm.com/en/Download.htm |
- இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களக்கு L Alarm57.exe என்ற பைல் வரும் அந்த பைலை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள்.
- வரும் விண்டோவில் Run பட்டனை அழுத்துங்கள்.
- அதற்கு அடுத்து வரும் விண்டோவில் Read Manual என்ற பட்டனை அழுத்தவும்.
- அதில் இந்த மென்பொருளின் அனைத்து விளக்கங்களும் சிறப்பம்சங்களும் செயல் படுத்தும் முறைகளும் விளக்கமாக கொடுத்து இருப்பார்கள் அதை கண்டிப்பாக பார்த்துகொள்ளவும்.
- அடுத்து Install என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Read Licence Agreement என்பதில் Agree என்று கொடுக்கவும்.
- அடுத்து உங்களுக்கு Authorization Code கேட்கும். அதில் நீங்கள் எதுவும் கொடுக்காமல் Ok மட்டும் கொடுங்கள்.
- அவ்வளவு தான் உங்கள் கணினியில் L Alarm இன்ஸ்டால் ஆகி விடும்.
- உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்து விடவும்.
பயன் படுத்தும் முறை:
- உங்கள் கணினியில் Start - Programs - L Alarm - Options செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.(இதில் நிறைய வசதிகள் உள்ளது அனைத்தையும் விளக்க நேரமில்லாததால் முக்கியமானதை மட்டும் தெரிவிக்கிறேன். முன்பு கூறியது போல் Read manual பகுதிக்கு சென்று அனைத்தையும் பார்த்து கொள்ளவும்).
- இதில் Sound என்பதை கிளிக் செய்யவும்.
- அதற்கு பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள .Mp3 (or) .Wav பைலை செலக்ட் செய்யவும்.
- உங்களுக்கு அது போல பைல்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். Need Sound Files என்ற வசதியை அவர்களே கொடுத்து உள்ளார்கள். அதில் சென்று தரவிறக்கி இங்கு பொருத்துங்கள்.
- உங்களுக்கு எந்தெந்த எந்தெந்த Alarm தேவை படுகிறதோ அதை பொருத்துங்கள்.
- கடைசியில் உள்ள Armed என்ற இடத்தில் கண்டிப்பாக ஏதேனும் சவுண்ட் கொடுக்க வேண்டும்.
- முடிவில் Ok கொடுத்து வெளியில் வந்து விடுங்கள்.
- இப்பொழுது நீங்கள் கணினியில் இருந்து விலக நேரிட்டால் Windows+L கீயை ஒன்றாக அழுத்திவிட்டு செல்லவும்.
- இப்பொழுது யாராவது வந்து இந்த கணினியின் Power கேபிளை பிடுங்கினால் போதும் உடனே உங்கள் கணினி நீங்கள் theft Alarm செலக்ட் செய்த சவுண்டில் அடிக்க துவங்கி விடும்.
thanks you very much(cảm ơn bạn rất nhiều)
ReplyDelete