Saturday, September 11, 2010

கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைalt ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ் டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அதனால் தான் 
இவற்றை பிளாஷ் டிரைவில் புரோகிராம்களாகவே பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. இவை பெரும்பாலும் தனி நபர் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத்தான் தீர்வுகளைத் தரும். அத்தகைய புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. சிகிளீனர் (Cleaner)சிகிளீனர் புரோகிராமி னைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளியேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.

2. ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller):  இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து புரோகிராம்களை எளிதாக அன் இன்ஸ்டால் செய்திட முடியும். ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் நீக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அவற்றை அழகாக எடுத்தெறிகிறது. போர்ட்டபிள் பதிப்பு http://www.revouninstaller.com/ revouninstaller.zip என்ற முகவரியில் கிடைக்கிறது. அதனை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதியவும்.

3.ஈஸி கிளீனர் (Easy Cleaner)இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனையும் பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை http://personal.inet.fi/business /toniarts/ecleane.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

4. சூப்பர்ஆண்ட்டி ஸ்பைவேர் ஆன்லைன் சேப் ஸ்கேன் (Super Anti Spyware Online Safe Scan) : மால்வேர் எனப்படும் ஸ்பை வேலை மேற்கொள்ளும் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைப் பல மாதங்கள் தேடிய பின் இது இருப்பது தெரிந்தது. மிகச் சிறப்பாக இது வேலை செய்கிறது. டாஸ் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை இயக்கியவுடன் விண்டோ இன்டர்பேஸ் ஒன்று தந்து நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, ஸ்பை வேர்களைக் கண்டறிகிறது. இதன் சிறப்பு இந்த புரோகிராம் அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதுதான். இதனை http://www.superantispyware. com/onlinescan.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம்.

5. ஹைஜாக் திஸ் (HijackThis) : ட்ரென்ட் மைக்ரோ நிறுவனம் தரும் புரோகிராம். இது எந்த மால்வேர் புரோகிராமினையும் பிக்ஸ் செய்வதில்லை. ஆனால் கண்டவுடன் நமக்கு ஒரு ரிப்போர்ட் தருகிறது. இதனை நாம் படித்து அறிந்து கொள்ள முடியாது. அப்படியே இந்த தளம் தரும் ஆன்லைன் அமைப்புகளில் பேஸ்ட் செய்தால், மால்வேர்களை நீக்கும் வழிகள் கிடைக்கும். http://hjtdata.trendmicro.com/hjt/analyzethis/index.php என்ற தளத்தில் இது கிடைக்கிறது.

6. ரெகுவா Recuva) ): . இதன் போர்ட்டபிள் புரோகிராம் http://www.piriform. com/recuva/download/portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இது பிளாஷ் டிரைவில் இருப்பது மிக அவசியம். அறியாமல் அழித்த பைல்களை நீக்கும் பணியை இதன் மூலம் அழகாக மேற்கொள்ளலாம். சிகிளீனர் தயாரித்து வழங்கும் நிறுவனமே இதனையும் தயாரித்து வழங்குகிறது.


No comments:

Post a Comment