Saturday, September 4, 2010

மொபைலில் சுலபமாக type செய்ய புது சாப்ட்வேர்

தற்போதெல்லாம் மொபைல் போன்களின் பயன்பாடுகள் பெரிதும் அதிகரித்து விட்டது. பேசுவதற்காக என்று மட்டும் இருந்த போன்கள் தற்போது sms, ஈமெயில், chat, என விரிந்து online பேங்கிங் இல் இருந்து மொபைல் ரீசார்ஜ்கள் வரை அனைத்தையுமே செய்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இப்பயன்களை அடைவதில் ஒரு சிரமம் உள்ளது. பலருக்கும் மொபைல் போன்களில் டைப் செய்வது என்பது சுலபமாக இருக்காது, அதன் கீகள் மிக சிறியதாக இருக்கும். கணினியில் விரைவாக டைப் செய்பவர்கள் கூட மொபைல் போன்களில் டைப் செய்யும் போது தடுமாறுவார்கள். இக்குறையை சரிசெய்யவே, நாம் டைப் செய்யும் போது பிழை (சிறிய கீகளினால் பக்கத்தில் உள்ள கீகளை அழுத்திவிடுவது போன்ற பிழைகள்) ஏற்பட்டாலும் சரியாக புரிந்துக்கொள்ளும் intelligence உடன் ஒரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மொபைல் ஸ்க்ரீனில் தெரியும் keypad ஐ எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் அதன் அளவையும் நம் விருப்பப்படி வைத்துக்கொள்ளதக்கதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

http://www.youtube.com/watch?v=M9b8NlMd79w

இந்த சாப்ட்வேர்க்கு blindtype என பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால் இது பார்வையற்றவர்களுக்கானது அல்ல. அதாவது கண்மூடித்தனமான செயல்பாட்டிலும் இது சிறப்பாக வேலை செய்யும் எனும் பொருளில் வைத்துள்ளார்கள். இதனை iphone மற்றும் android போன்களில் பயன்படுத்தும் வகையில் வெளியிட இருக்கிறார்கள். விரைவில் சந்தையில் எதிர்பார்க்கலாம். iphoneகளில் பயன்படுத்த apple நிறுவனத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பதால் அதற்க்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. இதன் செயல்பாட்டை அறிய அருகிலுள்ள விடியோவை பாருங்கள். நன்றி..

No comments:

Post a Comment